Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கெட்ட கொலஸ்ராலை குறைக்கணுமா ? கவலைய விடுங்க… இந்த ரெசிபி ஒன்னு போதும்..!!

பச்சை பயறு சூப் செய்ய தேவையான பொருட்கள்:

பச்சை பயறு                                      – 1/2 கப்
உருளைக்கிழங்கு                          – 1
தக்காளி                                               – 1
வெண்ணெய்                                    – 1 டீஸ்பூன்
பூண்டு                                                  – 2 பல்
வெங்காயம்                                       – 1
உப்பு, மிளகுத்தூள்                         – தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பூண்டை தோல் நீக்கியபின், சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் பச்சை பயறை எடுத்து, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம்  வரை நன்கு ஊற வைத்தபின், சுத்தம் செய்து, தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கின் தோல் நீக்கியபின், பெரிய துண்டுகளாக வெட்டவும். மேலும் அதனுடன் தக்காளியையும் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து, அதில் ஊற வைத்த பச்சை பயறு, நறுக்கிய உருளைக்கிழங்கு, தக்காளி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றியபின், 4 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி ஆற வைக்கவும்.

மிக்சிஜாரில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிது வெண்ணெய் போட்டு உருகியதும், பூண்டைச் சேர்த்து சிவக்க வதக்கவும்.

பின்னர் பூண்டு நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, அதனுடன் அரைத்து வைத்த பச்சை பயறு விழுதுகளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ருசிக்கேற்ப உப்பு தூவி நன்கு கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும்.

இறுதியில் கொதிக்க வைத்த கலவையை ஒரு பவுலில் ஊற்றி, அதன் மேல் மிளகுத்தூள் தூவி, சோள சிப்ஸ்,  தேவைபட்டால் கேரட் துண்டுகளுடன் பரிமாறினால் சத்தான பச்சை பயறு சூப் ரெடி.

Categories

Tech |