நடிகர் சசிகுமார் நடித்துவரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கி வருபவர் சசிகுமார் . இவர் நடிப்பில் தற்போது எம்.ஜி.ஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து நடிகர் சசிகுமார் நடித்து வரும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’ . இந்த படத்தை திருமணம் என்னும் நிக்கா படத்தை இயக்கிய அனிஷ் இயக்குகிறார் . மேலும் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகைகள் வாணி போஜன் மற்றும் பிந்துமாதவி நடிகின்றனர்.
Happy to reveal the First Look poster of @SasikumarDir's #PagaivanukkuArulvai
Best wishes to the entire team!Directed by @AnisDirector @thebindumadhavi @vanibhojanoffl @sathishninasam @GhibranOfficial @4monkeysStudio @tkishore555 @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/mzSR95fXcQ
— Suriya Sivakumar (@Suriya_offl) December 25, 2020
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கருப்புச்சட்டையும் கண்ணாடியும் போட்டு செம ஸ்டைலாக உள்ளார் சசிகுமார். இந்த கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.