Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிலத்தகராறு காரணமாக… மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் “ஆட்டோ ஓட்டுனரின் குடும்பம் செய்த செயல்”..!!

நிலத்தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இன்று ஜீவானந்தம் தனது குடும்பத்துடன் கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை கண்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்த பத்திரிகையாளர்கள் அவர்களை  தடுத்து குடும்பத்தினரின்  மேல் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் ஜீவானந்தத்தின் குடும்பத்தாரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் ஜீவானந்தத்தின் நிலத்தை  மணிகண்டன் என்பவர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதோடு, மிரட்டி வந்ததாகவும்  அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்ட  மணிகண்டன் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.  விசாரணையில் மணிகண்டன்  இந்து முன்னேற்ற கழக அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்று தெரியவந்தது .மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜீவானந்தத்திற்கு மிரட்டல் விடுத்தது குறித்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |