Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக நடித்தது போதும்…! இனிமேல் வில்லனாக… ஆர்யா புதிய அவதாரம் …!!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகினார்.

இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில், புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |