நடிகர் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தில் யுவன் சங்கர் ராஜா மியூசிக்கல் மேஜிக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சக்ரா ‘. இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,ரெஜினா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இயக்குனர் எம்.எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . விரைவில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர் .
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘சக்ரா’ படத்தின் பின்னணி இசையை கிட்டத்தட்ட முடித்து விட்டாராம். மேலும் இந்த படத்தில் யுவன் ஒரு மியூசிக்கல் மேஜிக் செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது . ஒரு சில வினாடிகளே உள்ள அந்த வீடியோவிலிருந்து முழு படத்திற்கும் எந்த அளவுக்கு சிறப்பான பின்னணி இசையை கொடுத்திருப்பார் என்பதை அறியமுடிகிறது.