Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! குழப்பத்தை தவிர்க்கவும்…! வேலைப்பளு கூடும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! கடினமாக உழைத்தாலும் உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க கடினம்.

மற்றவர்கள் உங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள். என் குழப்பத்திற்கு எப்பொழுதும் இடம் கொடுக்க வேண்டாம். பயணத்தில் சின்ன சின்ன தடை தாமதம் இருக்கும். சில நபர்களின் பேச்சு மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலையில் டென்ஷன் இருக்கும். முன்கோபம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எச்சரிக்கை மிக அவசியம். தேவை இருந்தால் மட்டும் எந்த உறவையும் நாடி செல்ல வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகும். தாய் தந்தையரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேச வேண்டும். ஆதாயம் தரும் பதவி உங்களை தேடிவரும். திருமணதடை சின்னதாக இருக்கும். ஆலயம் சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது. மன அமைதியும் கூடும். மனம் வருந்தும் வகையில் சில சூழ்நிலை அமையும். பக்குவமாக இருக்க வேண்டும்.

காதலில் உள்ளவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனை வரும். மாணவ கண்மணிகளுக்கு சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கும். படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கருநீலம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள்.சிறிதளவு தயிர் சாதத்தையும் அன்னம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்ட எண் 5 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் கரு நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |