Categories
தேசிய செய்திகள்

21 வயது தான்… “இந்தியாவிலேயே குறைந்த வயது மேயர்”… குவியும் பாராட்டு..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டது அனைவரையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

கடந்தவாரம் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக சில இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் சென்றது. அம்மா நகராட்சியின் மேயரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் முடவன்முகள் வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்ற 21 வயது இளம் பெண் ஆர்யா ராஜேந்திரன் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆல் செயின்ட் கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பயின்று வரும் வருகிறார். 21 வயதில் திருவனந்தபுரத்தில் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் கேரளா மட்டுமல்ல. இந்தியாவிற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். இளம்வயது மேயர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இவர் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்யா ராஜேந்திரனுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |