Categories
உலக செய்திகள்

பாதிப்பு அதிகமா இருக்கு…. வீட்டை விட்டு வெளிய போகாதீங்க…. சீனா அறிவிப்பு …!!

சீனாவில் உள்ள துறைமுக நகரில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் தற்போது தீவிரமாக பரவக் கூடிய புதிய வகைக் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து துறைமுக நகரமான டாலியன் என்ற பகுதியில் இருக்கும் ஐந்து மண்டலங்களில் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல என்று அறிவுறுத்துள்ளது. டாலியன் சீனாவில் உள்ள வடகிழக்கு துறைமுக நகரமாகும். இங்கு கடந்த 24 மணி நேரத்திற்குள் ஏழு நபர்களுக்கு புதிய புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து உள்ளூரில் உள்ள அதிகாரிகள் டாலியனில் உள்ள பல மில்லியன் மக்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்யும் திட்டத்தை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்நகரில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் பள்ளிகள் மற்றும் பொது இடங்களை அடைத்துவிட்டனர். மேலும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களில் மட்டுமே இந்த புதிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |