Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாக்ஸிங் டே டெஸ்ட்… நான்கு மாற்றங்களுடன்…. பதிலடி கொடுக்க போகும் இந்தியா ..!!

நான்கு மாற்றங்களுடன் மெல்போர்ன் நகரில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் 11 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் யார் என்பதை பிசிசிஐ வெளியிட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் போட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஆஸ்திரேலியா – இந்தியா, தென் ஆப்பரிக்கா – இலங்கை, நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன.

இதையடுத்து ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மெல்பேர்ன் நகரிலுள்ள எம்சிஜி மைதானத்தில் நாளை (டிச. 26) நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாடவிருக்கும் 11 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

கேப்டன் விராத் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் குழைந்தை பிறப்புக்காக தாயகம் திரும்பியுள்ள நிலையில், இந்தப் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அஜிங்கியா ரஹானா கேப்டனாகவும், சத்தீஸ்வர் புஜாரா துணை கேப்டனாகவும் செயல்படவுள்ளனர்.

முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய ப்ருத்வி ஷா நீக்கப்பட்டார். காயம் காரணமாக முகமது ஷமி விலகியுள்ள நிலையில், விக்கெட் கீப்பர் சாஹா, விராத் கோலி ஆகியோருக்கு பதில் மாற்று வீரர்களாக ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா, ரிசப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக களமிறங்கவுள்ளார்.

பகல்-இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இந்திய அணி மோசமான சாதனையை படைத்தது. இதைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதிய கேப்டனான ரஹானே இந்திய அணி மீட்டெடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |