மக்களவை தேர்தல் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றதையடுத்து இன்று மாலை கட்சி தொண்டர்களை மோடி சந்திக்க இருக்கின்றார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகின்றது. தேசிய அளவில் பாஜக கூட்டணி மட்டும் 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது.
இந்நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் உள்ள பா.ஜ.க. கட்சியின் தலைமையகத்திற்கு அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மதியம் 2 மணியளவில் செல்கிறார். அதே போல மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தர இருக்கிறார்.அப்போது அக்கட்சியின் 20 ஆயிரம் தொண்டர்களை கட்சியின் அலுவலகத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.