Categories
அரசியல் மாநில செய்திகள்

உலகமகா ‘ராஜதந்திரி’ எடப்பாடி பழனிசாமி…! ஜெயலலிதாவையும் மிஞ்சிட்டாரே….!!

அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல தி.மு.க. திட்டமிட்டபடி மக்கள் சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும்!” எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அதில், பத்தாண்டுகளாக நடைபெறும் அ.தி.மு.க ஆட்சியில், மக்களுக்குப் பயன் தரும் சாதனைகள் என்ன என்பதை எடுத்தியம்பிட எதுவும் இல்லை என்பதால், தி.மு.க நடத்தும் மக்களுடனான மகத்தான சந்திப்பை, அரசாங்க அதிகாரத்தைக் கொண்டு முடக்கும் முனை முறிந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

அவரது உத்தரவின் பேரில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்குக் கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமசபை என்ற பெயரைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளும் தனியாரும் கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக் கூடாது என டிசம்பர் 24 – ஆம் தேதியன்று பொழுது சாய்ந்தபிறகு அறிக்கை வெளியாகிறது.

இரண்டே நாட்களில் இத்தனை பயம் வந்து இதயத்தில் கூடு கட்டிக் கொண்டதா? அரசு சார்பில், முழுமையான அளவில், எல்லா அமைப்புகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் திராணியின்றி, தேர்தல் நடைபெற்ற ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டங்களை நடத்தும் வக்கின்றி வழியின்றிப் போன ஆட்சியாளர்கள், தி.மு.க.வினர் மக்களைச் சந்தித்தால் – அனைத்துக் கிராமங்களிலும் அதற்குப் பேராதரவு பெருகினால், தொடை நடுங்கி, தடை போடுவதா?

அ.தி.மு.க அரசின் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 24) இரவு உங்களில் ஒருவனான நான் பதிலறிக்கை வெளியிட்டேன். தி.மு.க.வினர் கூட்டம் நடத்தி, மக்களிடம் குறைகளைக் கேட்டு, ஆட்சியாளர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார்கள் என்றால், அ.தி.மு.க சார்பில் அதே போல ஊராட்சிகள் தோறும் – வார்டுகள் வாரியாகவும் கூட கூட்டம் நடத்தி, கடந்த பத்தாண்டுகளாக நடந்த சாதனைகள் என்ன என்பதை எடுத்துரைக்கலாமே?

குறிப்பாக, ஊர்ந்து தவழ்ந்து முதல்வரான உலகமகா ‘ராஜதந்திரி’ எடப்பாடி பழனிசாமி கடந்த 4 ஆண்டுகளாக, அம்மையார் ஜெயலலிதாவையே மிஞ்சக் கூடிய வகையில் நடத்தும் ஆட்சியின் சாதனைகள் என்னவென்று சொல்லலாமே? ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்புக்குப் புடைசூழ நிற்க, தோள் தட்டிச் சொல்லலாமே? என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |