Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்து நிறைத்த பீட்ரூட் சூப்… செய்து பாருங்கள் …!!!

பீட்ரூட் சூப் செய்ய தேவையான பொருள்கள் :

கேரட்                   – 3
பீட்ரூட்               –  2
பாசிப்பருப்பு     – ஒரு மேசைக்கரண்டி

வெண்ணெய்  – 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி
மிளகுத் தூள்     – 2 தேக்கரண்டி
உப்பு                       – தேவையான அளவு

 செய்முறை :

முதலில் ஒரு கிண்ணத்தில் பீட்ரூட், கேரட் மற்றும் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்

அதன் பின் வேக வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து, 3 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

அடுத்து கலவை கொதித்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். தக்காளி சாஸ், மிளகுத் தூள், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும்.சுவையான, சத்தான பீட்ரூட் சூப் தயார்.

Categories

Tech |