Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” துணியால் கழுத்து இறுக்கி… காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… கணவனுக்கு வலைவீச்சு…!!

குடும்ப தகராறில் காதல் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தென்காசி மாவட்டத்திலுள்ள  சுரண்டையில் வேல்சாமி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகள் பூங்கோதை திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அங்கு பூங்கோதைக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜோகிந்தர் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் இருவரும் பூங்கோதையின் சொந்த ஊருக்கு வந்தனர். ஜோகிந்தர் அங்கு கட்டிட வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதற்கிடையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்றும் தகராறு நடக்க  கோபமடைந்த ஜோகிந்தர் துணியால் பூங்கோதையின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதனால் காதுகளில் இருந்து ரத்தம் வடிய துடிதுடித்த பூங்கோதை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர் ஜோகிந்தர் வீட்டின் கதவை பூட்டி விட்டு தப்பி ஓடினார். வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்த போது பூங்கோதை சடலமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் பூங்கோதையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் பூங்கோதை குடும்பத்தகராறு காரணமாக தான் கணவரால் கொல்லப்பட்டாரா இல்லையெனில் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதோடு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய ஜோகிந்தரை வலைவீசி தேடி வருகின்றனர்

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |