Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறியது அனிதா தான்… வலைத்தளங்களில் கசிந்த தகவல்கள்…!!!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனிதா வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படுவர் . அந்த வகையில் இந்த வாரம் வெளியேறப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது . இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற சிவானி, ஆஜீத், அனிதா ,ஆரி ,கேபி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர் .

இந்நிலையில் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு அனிதாவுக்கு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் கசிந்துள்ளது. இந்த வாரத்தின்  முதல் நாளே தன் கணவர் குறித்து பேசிய ஆரிமீது ஆவேசப்பட்டு கத்தியது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் அனிதா பிக்பாஸ் வீட்டில் குருப்பீசம் இல்லாமல் தனித்தன்மையுடன் தைரியமாக மனதில் தோன்றியதை பேசி விடுவதால் அவருக்கும் ரசிகர்கள் உள்ளனர். எனவே அனிதா வெளியேறினாரா? என்பது நாளைய எபிசோடில்தான்  தெரியவரும்.

Categories

Tech |