Categories
மாநில செய்திகள்

மக்களே இன்று முதல்…. 30ஆம் தேதி வரை…. உங்க வீடு தேடி வரும் – அரசு அறிவிப்பு…!!

பொங்கல் பரிசுத்தொகைக்கான டோக்கன் இன்று முதல் 30ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் அதோடு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவு பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொங்கல்பரிசான ரூபாய் 2500 பரிசுத்தொகையை பெற இன்று முதல் 30ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் வீடுதோறும் நியாய விலைக்கடை பணியாளர்கள் வந்து டோக்கன் வழங்குவார்கள் என்றும், ஒரு கடையில் முற்பகலில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாளில் வாங்காத குடும்ப அட்டைதரர்களுக்கு ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும். பரிசுத்தொகை மற்றும் பொங்கல் தொகுப்பு இவை இரண்டும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும்” என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |