தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று கடம்பூர் ராஜு நம்பிக்கையாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையம், கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று கூறியது, 2014ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.
ஆகையால் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை அ.தி.மு.கவே கைப்பற்றும். மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில், அ.தி.மு.க. ஆட்சியை அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.