ஆந்திர மாநில அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்களை கும்மிடிப்பூண்டி அருகில் போலீசார் கைது செய்தனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூரில் ஊரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் அவர்களின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வாகனங்களை சோதனை செய்தார். அப்போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர மாநில பேருந்து ஒன்றை நிறுத்தினார். பேருந்தில் சந்தேகப்படும்படியாக இருந்த இரண்டு வாலிபர்களை கண்டனர்.
பின்னர் அரசு பஸ்சின் உள்ளே சென்று சோதனை செய்தபோது 12 பாக்கெட்டுகளில் சுமார் 24 கிலோ கஞ்சா இருப்பதை கண்டனர். போலீசார் விசாரணையில் அரசு பஸ்சில் பயணம் செய்தவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் எனவும் மற்றொருவர் கேரள மாநிலத்தை சேர்ந்த அருண்மோன் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.