Categories
மாநில செய்திகள்

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது…. வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்…!!

நடிகர் ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை எப்போது டிஸ்சார்ஜ்  செய்யலாம் என்பது குறித்து இன்று மாலைக்குள் முடிவு எடுத்துக் கூறப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் ரஜினி நலமாக இருக்கிறார். அவருடைய உடலில் முன்பைவிட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ரத்த அழுத்தம் சற்று அதிகமாகவே இருப்பதாக தெரிகிறது. மேலும் ரஜினியின் ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ரத்த அழுத்தம் காரணமாக ரஜினி முழு ஓய்வு எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் மருத்துவ பரிசோதனைகளில் கவலைப்படும் அளவுக்கு ரஜினிக்கு எதுவும் இல்லை. ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து இன்று மாலை முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |