Categories
உலக செய்திகள்

இரத்தப் புற்றுநோய்க்கு…. மருந்து கண்டுபிடிச்சாச்சி…. மகிழ்ச்சி செய்தி…!!

இரத்த புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடித்துள்ளதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளனர்.

ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கடந்த பத்து வருடங்களாக புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது அதனுடைய பலனாக ரத்தம் மற்றும் எலும்பு புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ரத்தம் மற்றும் எலும்பு புற்று நோய்களை எதிர்த்துப் போராடும் டி.இ.டி.ஐ 176 என்ற செயற்கை மூலக்கூறு ஒன்றை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்கை மூலக்கூறு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும் தன்மை கொண்டது என்றும், புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துவதில் இருந்து சரியாகும் வரை இந்த மூலக்கூறுகள் உடலில் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்  இந்த செயற்கை மூலக்கூறு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பது மட்டுமல்லாமல், உடலில் உள்ள உயிரணுக்களின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சி  செய்தியை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |