Categories
மாநில செய்திகள்

மக்களே… இன்று முதல் வழங்குவார்களா… வீட்டிலேயே இருங்க..!!

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு டிசம்பர் 30-ஆம் தேதி டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகையாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும் பணத்துடன் சேர்த்து ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கருப்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 4 முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

மேலும் இதற்கான டோக்கன் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வினியோகம் செய்யப்படும் என்றும், முற்பகல் 100 பேர், பிற்பகல் 100 பேருக்கு டோக்கன் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. எக்காரணத்தைக் கொண்டு உறையில் வைத்து வழங்கக்கூடாது. பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 13ஆம் தேதி அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க நியாயவிலை கடைக்கு ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வரவேண்டும். குறிப்பிட்ட நாளில் வாங்க முடியாத குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஜனவரி 13ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

Categories

Tech |