கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்றதால் ஹோட்டல் அருகே பரப்பரப்பு நிலவியது.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வகையான உணவகங்கள் உள்ளன. இவற்றுள் சில கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உணவு பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்தனர். இந்நிலையில் நெல்லை சந்திப்பு வேன் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடையில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு சலுகையாக ஒரு பிரியாணி பொட்டலம் ரூபாய் பத்துக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இச்சலுகையானது மாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டுமே உண்டு எனவும் பொதுமக்களை வித்தியாசமான முறையில் கவர்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர். இச்செய்தியை அறிந்த மக்கள் அனைவரும் 3 மணிக்கே வந்து வரிசையில் நின்று டோக்கன்களை பெற்றுக் கொண்டனர். ஒரு பிரியாணி பொட்டலம் பத்து ரூபாய்க்கு விற்பதால் மக்கள் அனைவரும் அந்த ஹோட்டலின் முன்பு திரண்டனர். வழக்கத்திற்கு அதிகமான கூட்டம் திரண்டதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.