தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் என்ன செய்தாலும் முதல்வராக முடியாது, அவர் ஜாதகத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை என பாஜக எம்பி ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இதனையடுத்து நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து சிவகங்கையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 224 ஆயுத நினைவு நாளில் கலந்து கொண்ட பாஜகவின் எம்பி ராஜா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் உட்பட எந்த கூட்டம் நடத்தினாலும் அவர் முதல்வராக முடியாது. அவர் ஜாதகத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.