Categories
மாநில செய்திகள்

தமிழகத்தையே அதிர வைத்த..” 2004, டிசம்பர் 26″… கண்ணீர் வெள்ளத்தில் இன்னும் மக்கள்..!!

தமிழகத்தில் சுனாமி தாக்கியதன் 16-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆறாத வடுக்களாக இருந்துவரும் தினமான இன்று டிசம்பர் 26,2004. டிசம்பர் 26ஆம் தேதி மாலை 6.29 இந்தோனேஷியாவில் 8.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தோனேசியா, மாலத்தீவில், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சுனாமியாக உருவெடுத்தது. இந்த சுனாமி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்று 16-வது ஆண்டு நினைவு தினம் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தை ஆட்டிப்படைத்த ஆழிப்பேரலை நாகை மாவட்டத்தை விட்டு வைக்கவில்லை. இந்த மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றவர்களும் இந்த பேரலையால் பாதிக்கப்பட்டனர்.

சென்னை, கடலூர், கன்னியாகுமரி மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். பலர் சுனாமியில் பறிகொடுத்த தங்களது சொந்தங்களின் நினைவாக கோவில் கட்டி வழிபாடு செய்துவருகின்றனர். இயற்கை சீற்றங்களால் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், சுனாமி போன்ற பேரிடர் ஏற்படும் உயிரிழப்புகள் மக்கள் மனதில் ஆழமான வடுவாக மாறிவிடுகிறது.

Categories

Tech |