Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இந்தி பேசும் மக்கள் ஆதரவு” ஆதிக்கம் செலுத்தும் பிஜேபி…..!!

இந்தி பேசும் பகுதிகளில் மட்டும் பாஜக 161 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது.

நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2018_ஆம் ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதாவிடம் இருந்த ஆட்சியை வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தன்வசப்படுத்தியது. ஆனால் இந்த வெற்றி தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் பிரதிபலிக்கவில்லை என்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரியவந்துள்ளது.

அதில் ,  ராஜஸ்தானில் 25 தொகுதிகளிலும் , மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளிலும், சத்தீஷ்காரில் 10 தொகுதிகளிலும் பாஜக மொத்தமாக முன்னிலை வகுக்கிறது. அதே போல பீகாரில் 38 தொகுதிகளிலும் , உத்தரபிரதேச மாநிலத்தில் 60 தொகுதிகளிலும் என மக்கள் அதிகமாக இந்தி பேசும் பகுதிகளிலுள்ள  சுமார் 161 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

Categories

Tech |