Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்கு நடந்து சென்ற பெண்…. முதுகில் தூக்கி சென்ற காவலர்…. வைரலாக புகைப்படம்…!!

மயங்கி விழுந்த பெண்ணை காவலர் ஒருவர் முதுகில் சுமந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உலகத்திலேயே மிக தலை சிறந்தது என்று கருதுவது மனிதநேயம் தான். உலகில் மனிதநேயமுடைய பல மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த வகையில் ஏதாவது ஒரு வகையில் நாம் மனித நேயத்தை பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 58 வயது பெண் ஒருவர் தரிசனத்திற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மலைச்சரிவில் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

இதை பார்த்த அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் ஷேக் அர்ஷாத் என்பவர் அந்த பெண்ணை தன்னுடைய முதுகில் தூக்கி கொண்டு சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றுள்ளார். பின்னர் அவருக்கு தேவையான மருத்துவ உதவியை செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் நலமாக உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பெண்ணை சுமந்து சென்ற காவலரை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |