திராவிட இயக்கத்தின் பேரவை நிறுவனர் சுப. தங்கபாண்டியன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து மக்களை பாதித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 1027 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் திராவிட இயக்கத்தின் பேரவை நிறுவனர் சுப. தங்கப்பாண்டி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சுப. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியில், “எனக்கு ககொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. எனவே இன்னும் இரண்டு வாரங்களுக்கு என்னிடமிருந்து செய்திகள் எதுவும் வராது. மேலும் நண்பர்கள் யாரும் என்னை குறித்து கவலைப்பட வேண்டாம். நான் விரைவில் மீண்டு வருவேன். மேலும் தொலைபேசி அழைப்புகளை தவிர்த்து விடுங்கள். என் உடல் நலம் குறித்து அவ்வப்போது வெளியிடுவேன்” என்று தகவல் தெரிவித்துள்ளார்.