வீட்டில் இறந்து 15 நாட்கள் ஆன தாயின் சடலத்துடன் 13 வயது சிறுவன் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாதுகளே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது தாய் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், எங்களுக்கு உதவி செய்யுமாறும் அழைத்துள்ளான். பின்னர் சிறுவன் கூறிய முகவரிக்கு விரைந்து சென்ற உதவிக்குழுவினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவனின் தாய் சடலமாக கிடந்துள்ளார். அந்தப் பெண் இறந்து பல நாட்கள் இருக்கும்.
அவன் சிறுவன் என்பதால் தாய்க்கு உடம்பு சரியில்லாமல் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துள்ளான். இவ்வாறு அந்த சிறுவன் 15 நாட்கள் வீட்டிற்குள் தாயின் சடலத்துடன் இருந்துள்ளான். இதனை அடுத்து உதவிக்குழுவினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.