பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் தன் முதல் டோஸாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான். இவர் தற்போது கொரோனா வைரஸிற்கு எதிரான தன் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுள்ளார். இந்த தகவலை சவுதி அரேபியாவின் அரசு ஊடகம் எஸ்பிபிஏ உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்துவ ஆணையமானது பைசர்/பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொரோனோ தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்துள்ளதாவது, கடந்த டிசம்பர் 17ஆம் தேதியில் சவுதி அரேபியாவில் முதன்முதலாக பைசர்/பயோஎன்டெக் தயாரித்துள்ள தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது.
மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது இடது கையில் பைசர் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு முன்பு பிரிட்டன்,அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் பைசா தடுப்பூசியை அனுமதித்து இதனை போடுவதற்கு பணிகளும் தொடங்கிவிட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோபிடன் பைசர் தடுப்பூசியை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.