Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன 71 குழந்தைகள்… கதறும் பெற்றோர்கள்… அதிரடியாக களமிறங்கிய போலீசார் …!!!

திருப்பூர் மாவட்டத்தில் காணாமல் போன 71 சிறுவர், சிறுமிகளை போலீசார் தனிப்படை அமைத்து மீட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் காணாமல் போன சிறுவர், சிறுமிகள், குழந்தை தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் ஆகியோரை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் பெயரில் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாநகரில் மட்டும் இதுவரை 71 சிறுவர் சிறுமிகள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களில் 58 சிறுவர் சிறுமிகள் தனிப்படை மூலமாக மீட்கப்பட்டு திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல குழு மூலமாக அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். சென்ற  10ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 10 குழந்தைகள் தனிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளும் கண்டுபிடிக்கப்பட்டனர். காணாமல் போன குழந்தைகளை தனிப்படை அமைத்து கண்டுபிடித்துக் கொடுத்த போலீசாருக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |