Categories
சினிமா தமிழ் சினிமா

மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது… இன்னும் மூணு வாரம் தான் இருக்கு… கமல் பேசிய அதிரடி புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற ஆரி ,அனிதா, ஷிவானி ,ஆஜித், கேபி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் யார் வெளியேற போகிறார்? என்பது நாளைய  எபிசோடில் தெரியவரும். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் அதிரடியாக பேசிய கமல் ‘நீங்க தப்பு பண்றீங்க அப்படின்னு சுட்டிக்காட்டினா, நான் மட்டுமா தப்பு பண்ணுறேன்னு எதிர்க் கேள்வி கேக்குறாங்க.

இன்னும் மூன்று வாரம் தான் இருக்கு அவங்க தப்ப அவங்க உணர்ந்தாங்களோ இல்லையோ, நீங்க நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க என்பது நீங்க ஓட்டு போடுற முறையிலேயே தெரியுது. மக்கள் தீர்ப்புதான் இறுதியானது என்பதை அவர்களும் உணரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது’ என்று கூறுவது போல் புரோமோ நிறைவடைகிறது ‌.

Categories

Tech |