குடும்பத்தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பத்தை அடித்த மேல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் கஜேந்திரராவ் – லட்சுமி பாய். கஜேந்திரராவ் விவசாயியாக உள்ளார். கடந்த சில நாட்களாக கஜேந்திரராவிற்கும் – லட்சுமி பாய்க்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சம்பவத்தன்று கஜேந்திரராவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த கஜேந்திரராவ் வீட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கியுள்ளார்.
இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் கஜேந்திரராவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் கஜேந்திரராவிற்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.