Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ என் பேரக்குழந்தைகள்” மகன் வீட்டிற்கு வந்த…. தாத்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஐயப்பன்- சுதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சுதாவின் மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய பேரக்குழந்தைகள் இருவரும் பிணமாக கிடந்துள்ளனர். மேலும் மருமகள் சுதாவும் சேலையால் தூக்கிட்ட நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி யுள்ளனர். மேலும் சுதாவின் கணவர் ஐயப்பன் வீட்டை விட்டு ஓடிய நிலையில் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சுதாவின் தந்தை அளித்த புகாரில், தன மகள் மற்றும் குழந்தைகளின் உடலில் காயங்கள் உள்ளதால் சந்தேகம் இருக்கிறது என்றும், தன்னுடைய மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் கடந்த வாரம் என்னிடம் வந்து 3 பவுன் நகையை வாங்கி சென்றார் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |