இரண்டு லாரிகளுக்கிடையே சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கரும்பு ஏற்றி கொண்டு இரண்டு லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில் இவ்விரண்டு லாரிகளுக்கும் இடையே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கரும்பு ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக காரில் மோதியது. இதனால் சேதமடைந்த கார் வேகமாக சென்று முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியின் மீது இடித்தது. இதனால் காரின் முன் பகுதியும் நசுங்கியது.
இதில் காரில் பயணித்துக் கொண்டிருந்த பெங்களூருவை சேர்ந்த மணி (வயது 50 ),அவரது மனைவி பரமேஸ்வரி (45 ),மகன் சந்தீப்( 23 ),பரமேஸ்வரியின் தாயார் சுசிலா( 65 ) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவ்விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் ராஜுப்பேட்டையை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரை விசாரித்து வருகின்றனர்.