இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகவுள்ள வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதையில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் மாயா ,டோரா , அறம் , ஐரா போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் . சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் இயக்குனர் சுசி கணேசன் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கவுள்ளார்.
இதில் இவர் வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவை தேர்வு செய்துள்ளார். 17ஆம் நூற்றாண்டில் வீரமங்கை வேலுநாச்சியார் சிவகங்கை பகுதியில் ஆட்சி புரிந்தவர். இவர் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போராடிய முதல் இந்தியப் பெண் வீராங்கனை ஆவார் . இவரது துணிச்சல் மிகுந்த வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க நடிகை நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.