மக்களவை தேர்தலில் பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடிக்கு பல்வேறு நட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய அந்த கடிதத்தில், மக்களவை தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்றதற்காக நான் எனது வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.