Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி… மீண்டும் அதே வகுப்பில் படிக்கணும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு பூஜ்யம் ஆண்டாக அறிவிக்கப்பட்டால் மாணவர்களின் ஒரு ஆண்டு வீணாகும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கணிப்பை கேட்கப்பட்டது. அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பை தமிழக அரசு ரத்து செய்தது. அதன் பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பை தற்போது வரை வெளியிடவில்லை.

அதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுடன், தமிழகத்தில் சிலர் நிறைந்துள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் திறக்கப்பட தற்போது வாய்ப்பு இல்லாத சூழல் வரும் பட்சத்தில், இந்த ஆண்டை பூஜ்யம் ஆண்டாக அறிவிப்பது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார். அவ்வாறு இந்த ஆண்டை பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவித்தால், 2019-2020 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த ஆண்டில் இரண்டாம் வகுப்பு படித்தவர்களாக கருதப்படாமல், 2021- 2022 கல்வியாண்டு தான் இரண்டாம் வகுப்பு செல்வார்கள். அதனைப்போலவே 2021-2022ஆம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கும். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |