நாடு முழுவதும் இதுவரை 16 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்ட்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 16 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 289 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 8 லட்சத்து 53 ஆயிரத்து 527 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.