Categories
தேசிய செய்திகள்

இது இக்கட்டான காலகட்டம்…! தப்பு தப்பா சொல்லாதீங்க… மக்கள் பயந்துருவாங்க …!!

கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் பரப்பரப்படுவதால், மக்‍களிடையே அச்சம் ஏற்படுவதாக குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய-சர்வதேச அறிவியல் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட கொரோனா வைரசுக்‍கு எதிரான கோவேக்‍சின் தடுப்பூசியை வெளியிடும் தருவாயில் இந்தியா உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

இதனை சாத்தியமாக்கிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாகக்‍ கூறினார். ஆனால், கொரோனா வைரசுக்‍கான தடுப்பூசி மற்றும் சிகிச்சை குறித்து மக்‍களிடையே தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இதனால் மக்‍கள் அச்சமடைவதாகவும் வேதனை தெரிவித்தார். விவேகமாக சிந்திக்கும் இந்திய மக்கள் இதுபோன்ற பொய்த் தகவல்களை நம்பக்‍ கூடாது என்று அறிவுறுத்தினார்.

Categories

Tech |