இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 69 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 22 ஆயிரத்து 272 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 69 ஆயிரத்து 118-ஆக உயர்ந்துள்ளது. இதில், 2 லட்சத்து 81 ஆயிரத்து 667 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 97 லட்சத்து 40 ஆயிரத்து 108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 251 பேர் மரணமடைந்து உள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 343-ஆக அதிகரித்துள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.