Categories
சினிமா தமிழ் சினிமா

கடலைபருப்பு விஷயத்தை கையில் எடுத்த கமல்… அனிதாவுக்கு செம கலாய்… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியில் போட்டியாளர்களுடன்  கமல்ஹாசன் உரையாடுவது வழக்கம். இதில் கமல் சனிக்கிழமை எபிசோடில் நாமினேட் ஆனவர்களில் யாரையாவது சேவ் செய்வார் . இந்நிலையில் இன்று வெளியாகி இருந்த முதல் புரோமோவில் போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டும் விதத்தில் அதிரடியாக பேசி இருந்தார் கமல் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் கடலைப்பருப்பு விஷயத்தை கமல் கையில் எடுத்துள்ளார் . இந்த வாரம் கடலைப்பருப்பு விவகாரம் பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சினையாகிவிட்டது . அதில் அனிதா தன் மீது தவறு இருப்பது தெரிந்தும் மன்னிப்பு கேட்காமல் பிடிவாதமாக இருந்தார் .

அதற்கான காரணம் தலைவர் பாலாஜி அதனை கையாண்ட விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் பாலாஜி கடலைப்பருப்பு விவகாரத்தில் யார் மனதும் புண்படும் வகையில் பேசி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று இறங்கி வந்தார். இந்நிலையில் இன்று போட்டியாளர்களிடம் இதுகுறித்து கமல் விசாரித்தபோது ,’கடலைப்பருப்பு ஊறப் போட்டு விட்டதால் அதை வடை அல்லது கூட்டு செய்து கொள்ளலாம் என நினைத்தேன்’ என்று கூறுகிறார் அனிதா. அப்போது குறுக்கிட்ட கமல் அனிதாவிடம் ‘நீங்கள் அதெல்லாம் செய்வீர்களா?’ என கலாய்க்க அனிதாவின் முகம் மாறுகிறது.

Categories

Tech |