கொரோனா வைரஸ், மாதத்திற்கு இரு உருமாற்றங்களை அடையக் கூடியது என்பதால், கவலைப்படத் தேவையில்லை என்றும், தற்போதுள்ள தடுப்பூசிகளே, உருமாற்றமடைந்த கொரோனாவுக்கு எதிராக செயல்படும் என்றும் எய்ம்ஸ் இயக்குனர் திரு. ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
மரபணு மாற்றம் பெற்ற புதியவகை கொரோனா வைரஸ், உலகை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுகுறித்து கவலையடைய தேவையில்லை என எய்ம்ஸ் இயக்குனரும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய பணிக்குழு உறுப்பினருமான திரு.ரண்தீப் குலேரியா கூறியுள்ளார். கொரோனா வைரஸ், மாதத்திற்கு இரு உருமாற்றங்களை அடையக்கூடியதுதான் என்று தெரிவித்துள்ளார்.
புதிய கொரோனா வைரஸ் அதிக தொற்றுத்தன்மை கொண்டது என்றும், ஆனால், தற்போது அளிக்கப்படும் சிகிச்சை முறையே போதுமானது என்றும், தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ள தடுப்பூசிகளே புதியவகை கொரோனாவுக்கு எதிராக செயல்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.