இன்றைய பஞ்சாங்கம்
27-12-2020, மார்கழி 12, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 06.21 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.
கிருத்திகை நட்சத்திரம் பகல் 01.19 வரை பின்பு ரோகிணி.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
பிரதோஷ விரதம்.
சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
இன்றைய ராசிப்பலன் – 27.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு பணம் பிரச்சனையில் இருந்து விடுபட சிக்கனம் உடன் இருக்க வேண்டும். வாகனங்களால் வீண் விரயம் இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் தேவையான நேரத்தில் கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல் பட வேண்டும் அதுவே நல்லது.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி தரும் செய்தி இருக்கும். வீட்டில் கருத்து வேறுபாடுகள் விலகும். தொழிலில் வருமானம் இரட்டிப்பாகும். கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும். தர்ம காரியங்கள் செய்து மகிழக் கூடும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் வீட்டில் தேவையில்லாத கருத்து வேறுபாடு இருக்கும். வீண் செலவுகள் உருவாகும். எதிலும் சிக்கனம் தேவை. பெரிய மனிதர்களின் ஆலோசனையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக அமையும்.உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி இருக்கும். பழைய நண்பர்களை சந்திக்க ஆர்வம் கூடும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் இருக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு நெருங்கியவர்களால் மனநிம்மதி குறையக்கூடும். வண்டி வாகனங்களால் வீண் செலவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு தொகை செய்யக்கூடும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் உண்டாகும்.உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று நீங்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு மனக்குழப்பம் உண்டாகும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் எதிலும் நிதானம் வேண்டும். சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்ப்பது பிரச்சினையை நீக்கும். உடல் நிலையில் கவனம் வேண்டும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுப காரியங்களில் தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் உங்கள் குணமறிந்து இருப்பார்கள்.குடும்பத்தில் அனைவருடனும் தெய்வ தரிசனத்திற்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மன நிம்மதி இருக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு சுக செய்திகள் கிடைக்கப் பெற்ற மகிழ்ச்சி உண்டாகும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஆடை ஆபரணம் வாங்க ஆர்வம் கூடும்.உத்தியோக வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை தரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உடன்பிறந்தவர்களால் வீட்டில் ஒற்றுமை நீங்கும். சுப காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வெளிவட்டாரத் தொடர்புகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு தேவையில்லாத பிரச்சினைகளில் மனநிம்மதி நீங்கும். குழந்தைகளின் மூலம் வீண் செலவுகள் இருக்கும். சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் இருக்கும்.உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் எதிர்பார்க்கும் காரியங்கள் எளிதில் நடக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு ஆரோக்கிய ரீதியாக பிரச்சினைகள் நீங்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். பண வரவு அமோகமாக இருக்கும் கடன் பிரச்சினைகளும் நீங்கும். புதிய அதில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்புகள் உயரக்கூடும்.