தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் இரண்டு இலக்குகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அது மட்டுமன்றி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு உரிய அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரம் மோதலாக மாறியுள்ளது. தாங்கள் செய்த ஊழல் பற்றி ஒருவரை ஒருவர் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்கள். இதனையடுத்து சட்டமன்ற தேர்தலில் திமுக இரண்டு இலக்குகள் வைத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதே திமுகவுக்கு முதல் இலக்கு. ஊழலில் திளைத்திடும் அமைச்சர்களில் ஒருவர் கூட வெற்றி பெறக்கூடாது என்பது இரண்டாவது இலக்கு என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.