உலக சுகாதார அமைப்பு மீண்டும் கொரோனா குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் மொபைல் செயலியை வெளியிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்து உள்ள புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு மீண்டும் கொரோனா குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் மொபைல் செயலிகளை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வைரஸ் பரவுவதால் இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உலக அளவில் தற்போதைய கொரோனா சூழல் குறித்த அனைத்து அப்டேட்களும் இந்த செயலி மூலமாக உடனுக்குடன் வழங்கப்படும் என கூறியுள்ளது.