வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியிலிருந்து ராஷ்ட்ரீய லோக்தந்திரி கட்சி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மத்திய அரசு பல்வேறு எதிர்ப்புகளை மீறி 3 புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேல் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பல அவர்களுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்திலும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பில் புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படாது என கூறப்படுகின்றது. இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியில் ஆட்சி புரியும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக்தந்திரி கட்சி விலகியுள்ளது