திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றியே பக்தர்கள் அனைவரும் கோவிலுக்குள் அனுமதிக்க பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்பார் உடல் வெப்பநிலையை மட்டும் பரிசோதித்தால் போதும், ஒருவேளை உடல் வெப்ப நிலை இருந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.