புதிய கொரோனா வைரஸால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு முன்பு பரவிய கொரோனா வைரஸை விட தற்போது பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் 56% விரைவாக பரவக்கூடியது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் விரைவாக அதிகரிக்கும் என்றும் லண்டன் தொற்றுநோய் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். Mathematical modelling of infectious Dissess (CMMID) தன் இணையதளத்தில் ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில் மருத்துவமனைகள் ICU வில் உள்ள படுக்கை வசதிகள் மற்றும் இறப்புகள் ஆகியவற்றை கண்காணித்து கொள்வதற்காக இரண்டு வகையான கணித மாடல்களை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது.
மேலும் வழக்கமாக இருக்கும் வைரசை விட தற்போது பரவி வரும் புதிய வைரஸ் அதிகமான தீவிரத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது குறைவாக ஏற்படுத்துகிறதா? என்பதற்கான தெளிவான ஆய்வுகள் தற்போது வரை கண்டறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். இருப்பினும் புதிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டைவிட 2021 ஆம் வருடத்தில் அதிக அளவில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.