கணவரை கட்டிப்போட்டுவிட்டு 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் யமுனா நகர் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான நேபாள பெண்ணின் கணவர் ஒரு விவசாயி. இவருக்கு இரண்டு வயதில் ஒரு மகள் உண்டு. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கணவரை தாக்கி கயிறால் கட்டி வைத்துள்ளனர். பின்னர் தன் கணவனின் கண் முன்னே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து ஐந்தாவது நபர் முயற்சிக்கும் போது அவருடன் போராடி அந்த பெண் அவரை பலமாக தாக்கி தன்னை காப்பாற்றியுள்ளார். ஆத்திரமடைந்த அந்த அவர்கள் அந்தப் பெண்ணை கொடூரமாக தாக்கி துன்புறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டில் பாலியல் குற்றங்கள் நடந்து வருவது தற்போது அதிக அளவில் பெருகி வருகிறது. நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது இத்தகைய சம்பவங்கள் பெருமளவில் உணர்த்துகின்றது.