கும்பம் ராசி அன்பர்களே…! அதிருப்தி கொஞ்சம் ஏற்படலாம்.
தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணத்தை முடிப்பது நல்லது. ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். வாய்வு சம்பந்தமான உணவுப் பொருளை தவிர்க்கப்பாருங்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் சிறு பிரச்சனை இருக்கும். மனம் திருப்தி அளிக்காத நிலையில் இருக்கும்.வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும். அலட்சியம் காட்டாமல் எதிலும் ஈடுபட வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். மற்றவர்களிடம் பொறுப்பு கொடுப்பதில் கூடுதல் கவனம் வேண்டும். பணம் விஷயமாக எந்த பொறுப்பையும் நீங்கள் கொடுக்க வேண்டாம். எந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவும் வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்ல வேண்டும். எச்சரிக்கை மிக்க நாளாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். நிதானமாக நடந்து கொள்வது நல்லது.கணவன்-மனைவி இடையே பேசித் தீர்க்க வேண்டும் எந்த விஷயத்திலும். வாக்கு வாதத்தை தவிர்க்க வேண்டும். சகோதரர் ஒத்துழைப்பு கிடைக்கும். பணம் விஷயத்திற்காக அலைய வேண்டி இருக்கும்.
காதலில் உள்ளவர்கள் நிலையைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் விளையாடும் பொழுது கவனமாக விளையாட வேண்டும். நல்ல முறையில் பாடங்களை படிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் நீலம் நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 8.அதிர்ஷ்ட நிறம் இளம் நீலம் மட்டும் மஞ்சள் நிறம்.