Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்த போது…. திடீரென வந்த கார்…. லாரி ஓட்டுனருக்கு நேர்ந்த சோகம்…!!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த  லாரி ஓட்டுனர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சிவகங்கை மாவட்டம் கீழ்மேல்குடி கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் விவேக்( வயது 48). அவர் ஓசூருக்கு சென்றிருந்த போது  ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் குமுதேப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக விவேக் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஓசூர் போலீசார் விவேக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |